தெ.கி.பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவராக முபாறக் மீண்டும் தெரிவு

🕔 April 8, 2016


Mubarak - Presiden - 011– எம்.வை. அமீர் –

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தின் தலைவராக வை. முபாறக் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக  ஊழியர் சங்கத்தின்18வது வருடாந்த பொதுக்கூட்டம்நேற்று வியாழக்கிழமை, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதேவேளை, பதிவாளர் எச்.அப்துல் சத்தார், ஊழியர் மேன்பாட்டு நிலையத்தின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம். ஜெசீல், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பி.எம். முபீன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் உதவிப் பதிவாளர் ஐ.எஸ். நர்சித் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இரண்டு அங்கமாக இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகள் கலந்துகொண்ட நிகழ்வு முதலாவதாக இடம்பெற்று முடிவடைந்தது. பின்னர் இரண்டாவது அமர்வில் ஊழியர் சங்கத்தின் 2016/2017 ஆம் ஆண்டுக்கான நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது. குறித்த தெரிவில் சில பதவிகளுக்கு வாக்களிப்பின்றியும் சில பதவிகளுக்கு வாக்களிப்புடனும் தெரிவுகள் இடம்பெற்றன.

அந்த வகையில், 2016/2017 ஆம் ஆண்டுக்கான தலைவராக வை. முபாறக் மீண்டும் அதிகப்படி வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார்.

ஏனைய பதிகளுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் விபரம் வருமாறு:

செயலாளர் – ஏ.எம். நஸ்வி

பொருளாளர் – எம்.எம். காமில்

உப தலைவர் எம்.சீ.ஏ. கபூர்

உப செயலாளர் – எம்.இசட்.எம். றிசான்

உப செயலாளர் – எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட்

கணக்குப்பரிசோதகர் –  எம்.எச்.எம்.நஸார்

நலன்புரி இணைப்புச் செயலாளர்கள் – எம்.எம்.நௌபர் (ஆண்களுக்கு), ஜிப்ரியா நௌபர் (பெண்களுக்கு) ஏ.எச். இசட். இம்தியாஸ் (பதிவாளர் பகுதி 01 க்கு), எஸ். கிஷோர் ஜகான் (பதிவாளர் பகுதி 02க்கு) வீ. முகுந்தன் (நிதிப் பகுதி), யூ.கே.சுல்பிகார் (முகாமைத்துவ பீடத்துக்கு), எம்.ஏ.எம். சிறாஜ் (கலைகலாசார பீடத்துக்கு), ஏ.ஏ. சிஹான் (அரபு பீடத்துக்கு), எம்.ரீ.எம். ஹாஸிர் (பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு), யூ.எல்.ஏ. அசீஸ் (சாரதி பிரிவுக்கு), எம்.இசட்.எம். நஜிம் (பிரதான நூலக பிரிவுக்கு), யூ.கே.எம். ஹுசைன் (பாதுகாப்பு பிரிவுக்கு), எம்.எஸ். அகமட் (ஆய்வுகூட பிரிவுக்கு), எம்.எச்.எம்.ஹலிம் (களஞ்சிய பிரிவுக்கு ), எம்.எல்.நிசார் (உடற்கல்வி பிரிவுக்கு), மற்றும் எம்.சி. ரோசான் (வெளிவாரி கற்கைப்பிரிவுக்கு).

நிகழ்வில் ஊழியர் சங்கத்தின் நிதி மேன்பாட்டுக்காக சங்கத்தின் தலைவர் முபாறக் ஒருதொகை நிதியை அன்பளிப்புச் செய்தார்.SEUSL - 02222SEUSL - 01111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்