11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது

🕔 April 7, 2016
Li-keqiang - 001லங்கைக்கு 11110 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்குவதற்கு (சீனா 500 மில்லியன் யுவான்கள்) சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலீடு, கைத்தொழில் வலயங்கள் மற்றும் கைத்தொழில் திட்டங்களுக்காக, இலங்கைக்கு முழுமையான உதவிகளை சீன அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனப் பிரதமரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், சீனா, இந்த நிதியை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளது.

இதன் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்