தலைப்புச் செய்திகள்

இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி

Director Saravananதமிழ் திரைப்பட இயக்குநர் சரவணன் – வாகன விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வலியவன் ஆகிய  வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் சரவணன் திருச்சி நோக்கி – அவருடைய காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இயக்குநர் சரவணன் செலுத்திச் சென்ற காரின் டயர் வெடித்தமையினால், கார் கட்டுப் பாட்டை இழந்து, அருகிலிருந்த பஸ் நிறுத்தமொன்றில் மோதியுள்ளது.

இதன்போது, இயக்குநர் சரவணனுடன் பயணித்த அவருடைய நண்பரும் காயமடைந்துள்ளார்