மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாவினை அமைச்சர் நிராகரித்தார்

🕔 March 14, 2016

Ranjith siyampala pittiya - 086லங்கை மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாக் கடிதத்தினை மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு வருவதற்குப் பொறுப்பேற்று, தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அருண விஜேபால நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஆயினும், குறித்த ராஜிநாமாக் கடிதத்தினை ஏற்றுக் கொள்வதற்கு மின்சக்தி அமைச்சர் மறுத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments