தலைப்புச் செய்திகள்

சிஐடிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக முன்னர் பணியாற்றிய ஷானி அபேசேகர, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு – பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து இப்பணியிடம் வெற்றிடமானது.

ரொஷான் அமரசிங்க பணிப்பாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்து செயற்படுவார்.