தகவல் அறிந்து கொள்ளும் சட்ட மூலம், இன்றைய தினமும் சமர்ப்பிக்கப்படாது

🕔 March 8, 2016
Postponed - 0978கவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம்  இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்,  மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உத்தேச சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என்று, ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில், வட மாகாணசபையின் அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக உத்தேச சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை ஒரு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள வட மாகாணசபை அமர்வுகளின் போது இந்த உத்தேச சட்டத்திற்கு மூலத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணசபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்காது ஆளுனரிடம் சமர்ப்பித்தமையினாலேயே, இவ்வாறு அனுமதியை பெற்றுக்கொள்ள கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தகவல் அறிந்து கொள்ளும் சட்ட மூலத்தினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் முகமாக, ஏற்கனவே பல தடவை காலம் குறிக்கப்பட்டிருந்தும், அந்த நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்