
அரச நிறுவனங்களின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று (11) உரையாற்றிய அவர், எந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாகக் கூறினார்.
“அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சபைத் தலைவர்கள் உட்பட – பல பதவிகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
”அந்த வகையில் யாரை மாற்றவது என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எந்த நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படும். கவலைப்படத் தேவையில்லை. மாற்றங்களை விரைவில் அறிவிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரு அரசாங்கம் செயல்படும்போது, நிறுவனங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சில அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது பிற பொறுப்புகளை ஏற்கவோ இடமாற்றங்களைக் கோருகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், மாற்றங்கள் நன்மை பயக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம். அத்தகைய முடிவுகளை எடுக்கும்போது இந்த காரணிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும், ”என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


