நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

🕔 February 29, 2016
Hirunika - 086நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு இன்று ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.

நீதிமன்றத்தினுள்  பிரவேசிக்கும் போது சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்த வேண்டும் என்ற போதிலும், ஹிருணிகா அவ்வாறு செய்யாமையினால் எச்சரிக்கப்பட்டார்.

இந்தத் தவறுக்காக முதலில் எச்சரிக்கை விடுப்பதாகவும் இதே தவறை மீண்டும் செய்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது நீதிமன்றம் தெரிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்