அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு

🕔 February 28, 2016

Pakurudeen - 072– எஸ். அக்தர் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ((Amparai District Journalists’ Forum) தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஊடகத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட கலாபூஷணம் பகுர்தீன் இலங்கை ரூபாவாஹிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.

தமிழ் ஊடக செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக, ஆங்கில ஊடகங்களிலும் இவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் என தற்போது அழைக்கப்படுகின்ற அமைப்பு, கரையோர செய்தியாளர் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக உறுப்பினராகவும், இரண்டாவது தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்தோடு, கரையோர செய்தியாளர் சங்கமானது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும், அச்சங்கத்தின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக இவர் உழைத்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் எம்.ஏ. அப்துல் மஜீத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் கலாபூஷணம் பகுர்தீன் பணியாற்றியுள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவரின் ஊடகச் செயற்பாடுகளுக்காக கலாசூரி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களும், கௌரவங்களும் பல்வேறு காலகட்டங்களில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்