இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு

🕔 March 3, 2016

SLMC - 02
– முஹம்மட் –

லங்கையிலிருந்து மலேசியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூதுக் குழுவினருக்கும், அந்த நாட்டின் ஆளும் கட்சியான  UMNO வின்  செயலாளர்  அத்னான் பன் தெங்கு மன்சூருக்கும் இடையிலான சந்திப்பு ,  UMNO கட்சித் தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மு.காங்கிரஸ் சார்பில் தூதுக்குழுவின் தலைவரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன் தூதுகுழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

மலேசியாவின் ஆளும் கட்சியான UMNO வினுடைய இளைஞர் பிரிவின் அழைப்பை ஏற்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூது குழுவினர் கடந்த 28 ஆம் மலேசியா சென்றனர்.

12 பேரைக் கொண்ட மேற்படி தூதுக் குழுவினர் 05 நாள் செலயமர்வில் 05 நாள் செயலமர்வில் கலந்து கொள்கின்றனர்.SLMC - 04SLMC - 03SLMC - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்