
பிபிசி செய்தி நிறுவனம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேச்சை தவறாக படத் தொகுப்பு செய்து, பார்வையாளர்களை தவறாக வழி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டிரம்பிடம் பிபிசி மன்னிப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அவதூறு வழக்குக்கு எந்த அடிப்படையும் இல்லை என பிபிசி கூறியுள்ளது.

மேலும் டொனால்ட் டிரம்ப் கோரிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 30,000 கோடி ரூபாய்) இழப்பீட்டு தொகையை வழங்கவும் பிபிசி மறுத்துள்ளது.
ட்ரம்பின் 2021ஆம் ஆண்டு உரையின் சில பகுதிகளை தொகுத்து குறித்த ஆவணப்படம் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை” அந்த படத்தொகுப்பு ஏற்படுத்தியதாகவும், 2024 நிகழ்ச்சியை மீண்டும் காட்டப்போவதில்லை என்றும் பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.


