ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு

🕔 February 26, 2016

Japanese - 0876ப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளதாக புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

1920ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளமை இப்போதுதான் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் பிறப்பு வீதம் குறைந்துவருகின்றமை மற்றும் குடிவரவில் வீழ்ச்சி ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில், ஜப்பானியக் குடிமக்களில் சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு 65 வயதுக்கு அதிகமானவர்களாக இருப்பார்கள் என, அரசாங்கத்தின் மக்கள்தொகை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக முதியோர்களை பராமரிக்கும் தொகை பெருமளவில் அதிகரிக்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்