சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

🕔 February 25, 2016
Sarath fonseka - 032பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இம்மாதம் நியமிக்கப்பட்டார்.

இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்