சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

🕔 February 23, 2016

Rakava Jinarathana Theraஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்க வேண்டுமென அந்தக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவர் ராகவ ஜினரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுயநலன் கொண்ட சிலர் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். பதவி ஆசை கொண்டவர்களின் இந்த முயற்சிகள் – கட்சியின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றமை தொடர்பில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என்று கூறிய ஜினரத்ன தேரர், சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் காரணமாக, கட்சி பிளவடைந்து விடும் என்று, தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்