தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு
– யூ.எல்.எம். றியாஸ் –
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற, அம்பாறை மாவட்டம் பொத்துவில் ஏ.எல்.எம். அஷ்ரப்புக்கு அவரின் சொந்த ஊரில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தினையும், 100 மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் வென்றார்.
பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
வெற்றி வீரர் அஷ்ரப் – பொத்துவில் மணிக்கூட்டு சந்தியிலிருந்து, பிரதான வீதியூடாக சின்ன உல்லை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.இதன்போது பிரதேச மக்களும், நிறுவனங்களும் அஷ்ரப்பை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.