தலைப்புச் செய்திகள்

சுகாதார நிபுணர்களின் தொழிற் சங்கங்கள், அடையாள வேலைநிறுத்தில் நாளை குதிக்கின்ற

ரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வேலைநிறுத்தத்தை கைவிட்ட போதிலும், நாளை வியாழக்கிழமை (06) திட்டமிட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர்வதற்கு – சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறை கொடுப்பனவுகளில் ஏற்படும் வெட்டுக்கள், தங்கள் தொழில்களைப் பாதிக்கின்றன என்றும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதால், சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்கள் நாளை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்தன.

அதன்படி, துணை மருத்துவ சேவைகள், மருத்துவ ஆய்வகங்கள், தொடர்புடைய மருத்துவ சேவைகள், கதிரியக்கவியல், மருத்துவ பயிற்சியாளர்கள், குடும்ப சுகாதார சேவைகள், கண் மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பூச்சியியல் நிபுணர்கள், பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் – வேலைநிறுத்தத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.