தலைப்புச் செய்திகள்

சிகரட், மதுபானங்களின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

சிகரெட் விலைகள் இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கலால் வரி அதிகரிப்புடன் – சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை  05  மற்றும் 10 ரூபாய்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை புகையிலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 05 ரூபாயினாலும், dunhill மற்றும் Gold Leaf  சிகரெட்டுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மனுபானங்களின் விலைகளை 06 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.