மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

🕔 June 7, 2015

08– அஸ்ரப் ஏ. சமத், ஷப்வான் ஷஹீத் –

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான  தாக்குதல் மற்றும் இனச்சுத்திகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் (SLMDI)  நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

மியன்மார் முஸ்லிம்கள் இன அழிப்புச் செய்யப்படும் விவகாரத்தில், ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும்,  ச ர்வதேச சமூகம் இவ் விடயத்தில் உடன் தலையிட்டு ரோஹிங்கிய மக்களின் இருப்பு மற்றும் உயிர் உடைமைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.

மேலும், ரோஹிங்கிய முஸ்லிம்களை சித்திரவரை செய்து வருகின்றவர்களை, சர்வதேச  விசாரணைகளுக்க உட்படுத்துமாறும் –  ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பப்பட்டது.

பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.010703

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்