சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

🕔 June 7, 2015

Rathakrishnan - 02– எம்.சி. அன்சார் –

ம்மாந்துறை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ட ஆய்வு கூடத்தினை, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் நேற்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆய்வு கூடம் நிர்மாணிக்கப்பட்டது.

மேற்படி ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை தேசிய பாடசாலை அதிபர் எச்.எம். பாறூக் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, ஆய்வு கூடத்தினை திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதியமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண உறுப்பினர் தயா கமகே,  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஜீம், வலயக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். Rathakrishnan - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்