நீதிமன்றம் பிணை மறுப்பு; ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே

🕔 February 10, 2016
Gnanasara - 012பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், நேற்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசாரரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தபோதும், எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் பிணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்