துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி

🕔 February 10, 2016

Gun shot - 01துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவர், வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பலியாகினர்.

முக்சக்கர வண்டியில் வந்த அடையாளம் காண்படாத குழுவொன்று, வீட்டில் வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி மூவரும் கொல்லப்பட்டனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் 19, 24 மற்றும் 49 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களாவர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்