டலஸ் குழுவினர் – ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைக்க தீர்மானம்

🕔 July 10, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் – பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – கட்சியின் உறுப்பினர் சரித ஹேரத் எம்.பி தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் பரந்த அரசியல் சக்தியின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரலில், பிரதான எதிர்க்கட்சி தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் கூட்டணியை’யை உருவாக்குவதற்கான முதல் படியாக, சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தி – புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் 06 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளனர்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது, பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்று – சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் அமர தீர்மானித்தார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்