தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவித்தல்: கால அவகாசம் நீடிப்பு

🕔 June 22, 2024

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று -ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த வயதினருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால், தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் அவர்கள் இப்போது தங்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இந்த மாத இறுதி வரை அவகாசம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார.

ஆரம்பத்தில், மேற்கண்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு மார்ச் 31 ஆக இருந்தது.

இருந்தபோதிலும், பிரதேச செயலர்களின் கோரிக்கைகளையடுத்து, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம், இதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீடித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்