06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

🕔 June 21, 2024

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில், இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த 263 ஆண் கைதிகளுக்கும், 06 பெண் கைதிகளுக்கும் அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் 19 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலும், 30 பேர் மஹர சிறைச்சாலையிலும், 30 பேர் வாரியபொல சிறைச்சாலையிலும், 28 கைதிகள் களுத்துறை சிறைச்சாலையிலும் தண்டனை அனுபவித்து வந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்