13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

🕔 June 20, 2024

ரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள், விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த காலங்களில் இருந்துள்ளது என தெரிவித்துள்ள அவர், தற்காலத்தில் மக்களை பிளவுப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

அண்மையில் வடக்குக்குச் சென்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்