“13ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்தடவுடன் அமுல்படுத்துவேன்”: சஜித் உறுதி

🕔 June 9, 2024

“நான்ஆட்சிக்கு வந்தவுடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

‘சக்வல’ திட்டத்தின் கீழ் – கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயத்துக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறையொன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் கூறினார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு – தங்கள் மதம், இனம் எதுவாக இருந்தாலும் ‘ஒரே தாயின் பிள்ளைகளாக’ அனைவரும் கைகோர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பல்வேறு தலைவர்கள் 13வது திருத்தச் சட்டம் குறித்து பேசுவதற்கு அஞ்சுகின்றனர் என்றும், ஏனெனில் அவர்கள் ‘அரசியல் சந்தர்ப்பவாதிகள் எனவும் கூறிய அவர், 13வது திருத்தத்தை ‘நேராகப் பேசுபவர்’ என்ற வகையில் – தான் அதனை அமுல்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்