2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

🕔 April 9, 2024

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

க.பொ.த சாதாரண தர பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு மொத்தம் 4,441 ஆங்கில ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு 6,500 ஆங்கில ஆசிரியர்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

”அதன்படி, இந்த ஆண்டு பாடசாலைகளின் களின் எண்ணிக்கையை 1,000ஆல் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில் 765 பாடசாலைகள் ஆங்கிலத்தில் பாடங்களை நடத்தவுள்ளன” எனவும் கூறினார்.

மேலும், ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கையை 6,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்