இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், 06 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்தடைந்தார்

🕔 February 6, 2016

Sayed Husain - 0112
க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன் இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்தார்.

எமிரேட்ஸ் வானூர்தி சேவைக்கு சொந்தமான ஈ.கே.650 விமானம் மூலம்  இலங்கை வந்தடைந்த ஆணையாளருடன் 06 பேரைக் கொண்ட குழுவொன்றும் வருகை தந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹூசைன் யாழ்ப்பாணம், திருகோணமலை, மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆணையாளர் கவனம் செலுத்தவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்