‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில், கோட்டாவின் புத்தகம் நாளை வெளியாகிறது

🕔 March 6, 2024

‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ என்ற தலைப்பில் எனது புத்தகம் வெளியிடப்படுவதை அறிவிக்க விரும்புகிறேன். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து – வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

2019 நொவம்பரில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரப்புகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்தன.

நான் பதவியேற்றவுடன் – இலங்கையிலும் முழு உலகிலும் பரவிய கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் எனது இரண்டரை ஆண்டுகால ஆட்சிக் காலம் முழுவதும் செலவழிக்கப்பட்டது. 2022 மார்ச் மாத இறுதியில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தடுப்பூசி பிரச்சாரம் முடிவடைந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கிய போது சதிகார சக்திகள் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரத்தை ஆரம்பித்தன.

இந்த நாடு சுதந்திரமடைந்த து முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவிக்காத வகையில் இன்று இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் நிகழ்ந்தன.

சுதந்திரத்திற்குப் பின்னர் – தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகார பரிமாற்றங்கள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் என்னை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்தது.

அந்தவகையில் 2022 நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை. இந்தப் புத்தகம் – சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் முதல் அனுபவத்தை விளக்குகிறது.

அந்தவகையில் இந்தப் புத்தகம் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

எனது புத்தகம் நாளை (7) முதல் முன்னணி புத்தகக் கடைகளில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்