இரட்டை சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது

🕔 February 28, 2024

ரட்டை சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், 13 வயது சகோதரர்களுக்கு வைத்தியமளிப்பதாகக் கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சிகிச்சை சடங்கின் பொருட்டு சிறுவர்களை தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் – ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 05 லட்சம் ரூபா பெறுமதியான பிணையில விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்