ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம்

🕔 February 26, 2024

ன்னை ஓர் ஆணாக அடையாளப்படுத்தி, 15 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அந்தச் சிறுமியின் அந்தரங்கப் படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான யுவதியொருவர் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி நேற்றைய தினம் (26) மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சுமார் ஒரு வருடமாக காதல் தொடர்பினை பேணிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான யுவதி கைதுசெய்யப்பட்டதையடுத்தே – தன்னிடம் இளைஞராக காதல் தொடர்புகளை பேணிவந்த நபர், ஒரு யுவதியென குறித்த சிறுமிக்கு தெரியவந்துள்ளது.

கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த யுவதி, சமூக ஊடகங்கள் மூலம் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார்.

தொலைபேசியில் அவர் ஆண் ஒருவரின் குரலில் பேசியுள்ளதாக தெரிவந்துள்ளது. இந்தநிலையில், குறித்த யுவதியைச் சந்திப்பதற்கு சிறுமி மறுத்தமையினால், சிறுமியிடமிருந்து பெற்ற அந்தரங்கப் படங்களை சமூக ஊடகங்களில் யுவதி பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

(நன்றி: ஐரிஎன் நியூஸ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்