“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த

🕔 February 16, 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது – ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

அது சாத்தியமாகலாம் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “எங்களுக்கு ரணிலைத் தெரியும். எனவே இது சில நேரங்களில் நிகழலாம்” என்றார்.

இருந்தபோதிலும் ஊடகவியலாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக சூசகமாகத் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுக்றமை தொடர்பில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், அவ்வாறான தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

“முன்பு நான் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தேன், இப்போது பதவியை வகித்து முடித்துவிட்டதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது நல்லது என்று நான் நம்புகிறேன், தற்போது நாடு இதைத்தான் கேட்கிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்