இரண்டு தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறும்: இந்திய ஊடகத்துக்கு ரணில் தெரிவிப்பு

🕔 February 10, 2024

னாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் இந்த வருடம் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (10)நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Comments