‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி

🕔 February 4, 2016

Mathurai Mutthu - 07
தெ
ன்னிந்திய தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார்.

இவர் பயணித்த கார் மரமொன்நில் மோதிக் கொண்டமையினால் ஏற்பட்ட விபத்திலேயே இவர் மரணமானார். இதன்போது, கார் சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் சிசிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது 32) இன்று காலை, காரில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணித்த காரின் டயல் திடீரென வெடித்தது. இதன்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கலை நிகழ்ச்சியொன்றுக்காக மதுரை முத்து அமெரிக்கா சென்றுள்ளார்.

‘அசத்தபோவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மதுரை முத்து.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்