புகைத்தல், மதுவுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

🕔 June 5, 2015

Anti smoke - 01– ஐ.ஏ. ஸிறாஜ் –

ர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் அசிரியர்களும் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலமொன்றினை – நேற்று வியாழக்கிழமை ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயம் முன்பாக நடத்தினர்.

பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்த மேற்படி ஊர்வலம், ஒலுவில் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் – புகைத்தல் மற்றும் மது பாவனையினால் ஏற்படும் தாக்கம் சம்மந்தமான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி, அதற்கெதிரான கோசங்களையும் எழுப்பினர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், பாடசாலை அதிபர் எம். சரிப்தீன், பிரதி அதிபர்களான ஏ.எல். யாசின்,எம்.எல்.எம். இஸ்மாயில் உட்பட சமுர்த்தி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments