முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது

🕔 January 29, 2024

ய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமானசஜித் பிரேமதாஸவை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 29) ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க சந்தித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுக் கொள்கைக்கான சிரேஷ்ட ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார்.

1980 ஆம் ஆண்டு கெடட் படையில் தனது ராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய தயா ஜெனரல் ரத்நாயக்க, 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி இலங்கை ராணுவத்தின் 20 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்,

அவருடைய ராணுவ வாழ்க்கையில் மதிப்புமிக்க ‘ரண விக்கிரம பதக்கம்’ உட்பட ‘ரண சூர பதக்கம்’, ‘உத்தம சேவா பதக்கம்’ ஆகியவற்றினையும் ‘தேச புத்ர சம்மனயா’ உள்ளிட்ட பல கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

Comments