காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

🕔 January 15, 2024

போக்குவரத்து விதியை மீறிய நபரொருவரிடம் காகித கட்டுகளை லஞ்சமாக கேட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலக்கத்தகடு விளக்கு இன்றி வாகனத்தை செலுத்திய குற்றத்துக்காக நபரொருவரின், சாரதி அனுமதிப்பத்திரத்தை கடந்த 02ஆம் திகதி பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

அதன்பின்னர் குறித்த நபர் தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொல்கஹவெல பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அதன்போது குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள், அனுமதிப்பத்திரத்தை மீள கையளிப்பதற்காக காகித கட்டுகளை லஞ்சமாக கோரியுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான கொன்ஸ்டபிள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்