ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு

🕔 February 3, 2016

Ranil+SF - 098பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமையிலான ஜனநாயக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஐ.தே.முன்னணியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவையும், அந்தக் கட்சி உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் உழைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம், வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இடத்துக்கு, சரத் பொன்சேகாவை நியமிப்பதோடு, அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, மேற்படி புரிந்துணர்வு இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்