நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை

🕔 January 8, 2024

நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ‘வொல்பெகியா’ (Wolbachia) என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இம்மாதம் 07ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான நாட்களைசிறப்புநுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக‘, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் டெங்கு நோயென உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி 1962ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்