காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது: அரியநேந்திரன்

🕔 June 3, 2015

Ariyanenthiran MP - 01– நர்சயன் –

யுதப்போராட்டத்தின் போது கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி, வடகிழக்குப்  பெண்கள்  பலபோராட்ங்களை நடத்தியும், அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் கிடைக்காமல் இருப்பது வேதனை தருகிறது என – மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்

நேற்று முன்தினம் திங்கட்கிழமை, மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதிநாள்  கலைநிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலம் தெரிவிக்கையில்;

“இந்துமதத்தில் பெண்தெய்வ வழிபாடு முக்கியத்துவம்பெறுகிறது. அதிலும் கண்ணகி தனது கணவனுக்காக நீதி கோரி போராடி மதுரை நகரை எரித்து நீதிபெற்ற வரலாறு இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் பெண்கள் தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத் தரக்கோரியும் – அதற்கான நீதியினை பெறமுடியாதவர்களாக இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் வட கிழக்கில் வாழுகின்ற பெண்கள் படையினரால் பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வரலாறு எம்மால் மறக்கமுடியாது. மட்டக்களப்பில்  கோணோஸ்வரிகளும், யாழப்பாணத்தில் கிருசாந்திகளும், முல்லைத்தீவில் இறுதிப்போரில் இசைப்பிரியாக்களுமாக பட்டியல் நீண்டு செல்கிறது.

தற்போது, ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு – புங்குடுதீவு மாணவி கொடுரமாக, அதே ஊரைச்சேர்ந்த காமுகர்களால் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இருக்கிறார். வித்தியாவின் கொலையினைக் கண்டித்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட பல பகுதிகளில்  எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு முன்னர் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி போராட முடியாத அளவிற்கு அடாவடித்தனமான ஆட்சி  அன்று இருந்தது.

பெண்களுக்கு மட்டும்தான் இன்று சுதந்திரம் இல்லை என்று கூற முடியாது. ஆண்களுக்கும் இந்தநாட்டில் சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு மண்டடூரில் அரச உத்தியோகத்தர் மதிதயன் பட்டப்பகலில் ஆயுததரிகளால் சுடப்பட்டார். இதனைக் கண்டிக்க பொது அமைப்புக்கள் இன்னும் முன்வரத் தயங்குகின்றன.

ஆனால்இ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு காலவரையரறயைக் கொடுத்து இருக்கின்றோம். அதற்கு பின் மக்களைத் திரட்டி மதிதயனுக்கு நீதிகோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்த இருக்கின்றோம். அதற்காக எமது மக்கள் முன்வரவேண்டும். மதிதயனுக்கான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, உரிய சூத்திரதாரி கைது செய்யப்படவேண்டும். அவ்வாறில்லாமல் இழுத்தடிக்கப்பட்டால்,  நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும்” என்றார்.

Comments