இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது

🕔 November 25, 2023

ரண்டாம் கட்டமாக தம்மிடமுள்ள கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

“காஸா பகுதியின் வடக்கே – உதவிப் பொருள்களை ஏற்றிய வாகனங்களை அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்படும் வரை, இரண்டாவது தொகுதி கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்தோம்” என, ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி கூறியுள்ளது.

ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு இணங்க, 13 இஸ்ரேலியர்கள், தாய்லாந்து நாட்டவர் 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் என, 24 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் 39 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேல் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள், வடக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்றபோது, அவர்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் கூறியுள்ளது.

மேலும் காஸா பகுதிகளில் இஸ்ரேலின் உளவு ட்ரோன்கள் மிக உயரத்தில் இன்று பறந்து திரிந்ததாகவும், இது யுத்த நிறுத்த மீறல் எனவும் ஹமாஸ் மேலும் குறிப்பிட்டுள்தாக, அல் ஜசீரா தெரவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்