வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல்

🕔 November 16, 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய ராஜபக்ஷ, 2024 வரவு – செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தமது கட்சி செயல்படாது என்று உறுதியளித்துள்ளார்.

கண்டி – ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ராஜபக்ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இது தொடர்பில் கூறுகையில், வரவு – செலவு திட்டத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம். ஆனால் திட்டத்துக்கு ஆதரவளிபோம் எனத் தெரிவித்தார்.

“வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், திட்டத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து அவற்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்” என்று கூறிய அவர், பிரச்சனை வரவு செலவுத் திட்டத்தில் இல்லை, அதைச் செயல்படுத்துவதில் உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்