நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

🕔 January 31, 2016

Anoma Fonseka - 098நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கான உறுப்பினர் எதிர்வரும் ஓரிரு தினங்களின் நிரப்பப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏற்கனவே பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் அனோமா பொன்சேகா ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்