
காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,078 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,506 பேர் சிறுவர்களாவர்.
இதேவேளை காஸவிலுள்ள பல வைத்தியசாலைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். பல வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக – காஸா முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன.
“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு காஸாவில் இருந்து பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு – இஸ்ரேல் தினசரி நான்கு மணி நேர – தாக்குதல் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ‘வெள்ளை மாளிகை’ தெரிவித்துள்ளது.



