இலங்கை கிறிக்கெட் நிறுவன செயலாளர் ராஜிநாமா

🕔 November 4, 2023

லங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் செயற்குழு மற்றும் தெரிவுக்குழு – பதவி விலக வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று கூறியிருந்தார்.

இதனிடையே, செயற்குழுவை ராஜினாமா செய்யுமாறு கோரி, சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்