ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

🕔 October 22, 2023

பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர்.

இவர் தற்போது துபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோன் என்பவரின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ (வயது 43) என்பவராவார்.

மேலும் சந்தேக நபரிடம் 506 கிராம் ஹெரோயின், 02 லட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவரிடமிருந்து ஒரு கார், மற்றொரு காரின் இரண்டு இலக்கத் தகடுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்