முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார்

🕔 October 22, 2023

மூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த வைத்தியர் பேஸ்புக்’கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து ஒரு பெண் அதை அகற்ற முன்வந்தார்.

குறித்த பெண், ‘பேஸ்புக்’கில் இருந்து பதிவை நீக்க வைத்தியரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதன்படி குறித்த வைத்தியர் 30 லட்சத்துக்கும் அதிகளவான பணத்தை  பகுதி பகுதியாக அந்த பெண்ணுக்கு வழங்கியிருந்தார்.

ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 03 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘பேஸ்புக்’ பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.

இதன்போது, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது வைத்தியருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வைத்தியர் முறைப்பாடு அளித்துள்ளார்.

வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபலமானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவையும் காட்டியுள்ளார்.

அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார்.

ஆனால், அது போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.

(நன்றி: அததெரண)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்