அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

🕔 October 19, 2023

க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும – இன்று (10) முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும – இன்று தொடக்கம் நாடாளுமன்றத்தில் இருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும

நாடாளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும எழுப்பிய கேள்விக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்க மறுத்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெருமவை அவையின் மையப் பகுதியிலிருந்து விலகிச் சென்று இருக்கையில் அமருமாமறு, சபாநாயகர் வலியுறுத்திய போதிலும் பதற்றமான சூழல் நீடித்தது.

இதனையடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

Comments