மத அவதூறு குற்றச்சாட்டில் ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது

🕔 October 6, 2023

த சகவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், இலங்கை ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கணினி குற்றப்பிரிவினர் இன்று (06) அவரைக் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவதூறுபடுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் – இந்திக தொட்டவத்த கருத்துகளை வெளியிட்டதாக சில முஸ்லிம் அமைப்புகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தன.

இந்திக்க தொடவத்த இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்