தெரண தொலைக்காட்சி உரிமையாளர் திலித் ஜயவீர அரசியல் கட்சியின் தலைவரானார்

இலங்கையின் பிரபல்யமிக்க ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் திலித் ஜயவீர அரசியலுக்குள் உத்தியோகபூர்வமாகப் பிரவேசித்துள்ளார்.
‘மவ்பிம ஜனதா கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவர் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, அந்தக் கட்சியின் தலைவராக திலித் ஜயவீர உள்ளார் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆவணம் தெரிவிக்கின்றது.
இந்தக் கட்சியின் சின்னம் ‘விமானம்’ ஆகும்.
திலித் ஜயவீர ‘தெரண’ தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைக்குழுவில் மொத்தமாக 86 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.